முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மும்பையில் சூர்யா வாங்கிய வீட்டின் விலை இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்

மும்பையில் சூர்யா வாங்கிய வீட்டின் விலை இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை தீஷா பதானி இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் தனது சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்தது இணையத்தில் வைரலாக பரவியது.

இதன் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியிருக்கிறாராம். தனது மகளின் மேற்படிப்புக்காக இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டுக்கு அருகே பாலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்களின் வீடுகள் இருக்கின்றனவாம்.

மேலும் அப்பா , அம்மா, கார்த்தி ஆகியோர் மும்பை சென்றால் அவர்கள் தங்க ஏதுவாகவும் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறதாம். நடிகர் சூர்யா சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Suriya