முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Dasara Movie Twitter Review: எப்படி இருக்கு நானியின் தசரா படம்?

Dasara Movie Twitter Review: எப்படி இருக்கு நானியின் தசரா படம்?

நானி

நானி

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று பான் இந்தியன் படமாக வெளியாகியுள்ள தசரா திரைப்படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நானி. நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது, தெலுங்கில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் நானி நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று இந்திய அளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள தசரா படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது...

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actress Keerthi Suresh