முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்புவின் பத்து தல... ஹெலிஹாப்டர் உடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ!

சிம்புவின் பத்து தல... ஹெலிஹாப்டர் உடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ!

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகரும் சிம்புவின் ரசிகருமான கூல் சுரேஷ் பொம்மை ஹெலிகாப்டருடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்த போடு' என்ற வசனத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமான கூல் சுரேஷ் மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிம்பு படத்தில் இவருக்கு கண்டிப்பாக ரோல் கொடுக்கப்படும். தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சோஷியல் மீடியாவில் கூல் சுரேஷ் பயங்கர ஃபேமஸ்.

திரையில் வெளியாகும் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று ரிவியூ கொடுப்பது தான் இவரின் ஸ்டைல். மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு பிரஷ் செய்துக்கொண்டே ரிவியூ சொன்னார். பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்தார். இப்படி ட்ரெண்டிங் விஷயங்கள் கையில் எடுத்து கொண்டு அதன் மூலம் பலரின் கவனத்தை பெற்ற கூல் சுரேஷ் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திம் வெளியீட்டின் போது படத்தின் பெயரை வைத்து பல பஞ்சுகள் போட்டு படத்திற்கு புரமோஷன் வேலையை செய்தார்.

ALSO READ | Pathu Thala Twitter Review: எப்படி இருக்கிறது சிம்புவின் பத்து தல படம்? - ட்விட்டர் விமர்சனம்!

இந்நிலையில் தற்போது சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல படத்திற்கு தனது பாணியில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கூல் சுரேஷ். குறிப்பாக சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், பத்து தல படத்தின் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூறி இருந்தார். வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டியும் அளித்திருந்தார். ஆனால் இன்று கையில் பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு பத்து தல FDFS பார்க்க வந்துள்ளார் கூல் சுரேஷ். தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்த நடிகர் கூல் சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also read... பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Simbhu, Silambarasan