முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பவித்ரா லட்சுமி

பவித்ரா லட்சுமி

ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருந்து வரும் பவித்ரா லட்சுமி தன்னை சுற்றி நடைபெறும் பல்வேறு விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. மாடலிங், நடிப்பு என கவனம் செலுத்தி வருபவர் பவித்ரா லட்சுமி. மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அது மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருந்து வரும் பவித்ரா லட்சுமி தன்னை சுற்றி நடைபெறும் பல்வேறு விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பவித்ரா லட்சுமி அவர் கடந்த 7 நாட்களுக்கு முன் உயிரிழந்தகாக தெரிவித்துள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருந்ததாவது, நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது பாப்பா. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல்.


நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஒரு முறை பேசுவதை ஒருமுறை உங்கள் உணவை சாப்பிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என்னை வேறு வழியின்றி விட்டுவிட்டீர்கள். தயவு செய்து எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் என்று நான் இப்போது கேட்கிறேன்.

Also read... சரத்பாபு உடல் தகனம்... ரஜினி முதல் சூர்யா வரை நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

இந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்த குடும்பமாக என் பக்கம் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள், நீங்கள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை என்றும் நடிகை பவித்ரா லட்சுமி தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Cook With Comali Season 2, Entertainment