முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ட்விட்டரில் காதல் மெசெஜ்.. ரொமான்ஸை அள்ளி வீசும் வந்தியத்தேவன் - குந்தவையின் க்யூட் ரிப்ளை!

ட்விட்டரில் காதல் மெசெஜ்.. ரொமான்ஸை அள்ளி வீசும் வந்தியத்தேவன் - குந்தவையின் க்யூட் ரிப்ளை!

கார்த்தி - திரிஷா

கார்த்தி - திரிஷா

கார்த்தி, தங்களின் தரிசனம் கிடைக்குமா என கேட்க, ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன் என திரிஷா பதிலளித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்திலிருந்து அக நக என துவங்கும் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்தப் பாடலை ரக்ஷிதா சுரேஷ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் குறித்து வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் ட்விட்டரில் சுவாரசியமாக உரையாடிக்கொண்டனர்

கார்த்தி, திரிஷாவைக் குறிப்பிட்டு, இளையபிராட்டி - hi, என ட்வீட் செய்ய, அதற்கு திரிஷா, என்ன வாணர்குல இளவரசே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு கார்த்தி, தங்களின் தரிசனம் கிடைக்குமா என கேட்க, ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன் என திரிஷா பதிலளித்தார்.

அதற்கு கார்த்தி, கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே? என கார்த்தி கேட்க, வேற என்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கப்போகுறீர்களா? என பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

top videos

    அதற்கு பதிலளித்த கார்த்தி, ஐய்யய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் வைப் ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன். என்று கார்த்தி கேட்க, வீரரே பாடல் எப்போதோ ரெடி. மாலை 6 மணி வரை காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். முதல் பாகத்தின் வெளியீட்டின்போது இருவரும் வந்தியத்தேவன் - குந்தவையாக உரையாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Actor Karthi, Actress Trisha, Ponniyin selvan