காதலுக்கு மரியாதை .... என்று கூறி கடந்த சில நாட்களாக தன் மனைவி மீது எழுந்த அவதூறு செய்திகளுக்கு முற்றுப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஏ.ஆர் ரகுமான்.
புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது அபிப்பிராயங்களை அவ்வப்போது பொது வெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம், நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, பிற மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்திய மொழியில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
— A.R.Rahman (@arrahman) April 8, 2022
அப்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழ் அன்னை புகைப்படத்தை பகிர்ந்தார். மேலும் , அந்த படத்தில், கவிஞர் பாரதிதாசன் எழுதிய இன்பத்தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்" என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன.
காதலுக்கு மரியாதை:
சில தினங்களுக்கு முன்பு, முன்னணி தமிழ் ஊடக நிறுவனத்தின் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர் ரகுமானும், அவரது மனைவி ஷெரினா பானுவும் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷெரினா பானுவுடன் கலந்துரையாடத் தொடங்கும் போது குறுக்கிட ஏ.ஆர்.ரகுமான், தனது இணையாரிடம் "இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க... பிளீஸ்" என்று தெரிவித்தார்.
அதற்கு அவர், ’தன்னால், சரளமாக தமிழ் பேச முடியாது என்றும், ஆங்கிலத்தில் உரையாட அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்" என்று தெரிவித்தார். ஏ.ஆர் ரகுமானின் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவியது. அவர், ’தனது மனைவியை தமிழில் பேச வற்புறுத்துவுதாகவும், தனது அபிப்பிராயங்களை திணிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், உண்மை அதுவல்ல. தமிழில் சரளமாக பேசத் தெரியாத மனைவியை வைத்து அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் 😁 pic.twitter.com/Mji93XjjID
— black cat (@Cat__offi) April 25, 2023
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?" என்று கேள்வி எழுப்பி அதை ஏ.ஆர்.ரகுமானுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு, ஏ.ஆர் ரகுமான், "காதலுக்கு மரியாதை" என்று பதில் அளித்துள்ளார். அதன்மூலம், தனது மனைவியிடம் தமிழ் மொழியை திணக்கவில்லை என்பதை எடுத்துரைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman