முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'அரசியலில் புகுந்து புதுமையைக் காட்டத் தயார்' - நடிகர் தாடி பாலாஜி சரவெடி

'அரசியலில் புகுந்து புதுமையைக் காட்டத் தயார்' - நடிகர் தாடி பாலாஜி சரவெடி

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

Actor Thaadi Balaji : தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நடிகர் தாடி பாலாஜி பிரத்யேகமாக  பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

தான் கட்டாயம் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் அதே கட்சியில் புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க | சிஎஸ்கே போட்டியை மகனுடன் பார்க்க வந்த சிம்ரன் - இவ்ளோ வளர்ந்துட்டாரா ? - வைரலாகும் வீடியோ

போதைப் பொருட்களை பொருத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும் என்றும் கூறினார். தற்போது பன்னிரெண்டாவது முடித்த மாணவ, மாணவியரை அடுத்த கட்டமாக கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து வருகின்றனர்.  மாணவர்கள்  இதனை கருத்தில் கொண்டு நன்கு படித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

top videos

    செய்தியாளர் - அசோக் குமார், சென்னை

    First published:

    Tags: Actor, Balaji