முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சேது பண்ணும்போது எனக்கு 36 வயசாகிடுச்சு - பொன்னியின் செல்வன் நிகழ்வில் விக்ரம் நெகிழ்ச்சி

சேது பண்ணும்போது எனக்கு 36 வயசாகிடுச்சு - பொன்னியின் செல்வன் நிகழ்வில் விக்ரம் நெகிழ்ச்சி

விக்ரம்

விக்ரம்

பொன்னியின் செல்வன் படக்குழு குறித்து நடிகர் விக்ரம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசியதாவது, ''பூங்குழலியாக நடிச்ச ஐஸ்வர்யாவின் ஆர்வம் எனக்கு பிடிச்சது. சேது படம் பண்ணும்போது எனக்கு 36 வயசாகிடுச்சு. ஆனா உனக்கு மிகப்பெரிய குழுவுடன் பணியாற்றிய அனுபவம் கிடைச்சதில் நான் பொறாமைபடுறேன். 5 மணி நேரம், 6 மணி நேரம் ஆனாலும் பேசிக்கிட்டே இருப்பாங்க. என்ன பேசுறாங்கனு பார்த்தா, நாய் குட்டி, பூனை குட்டி பத்தி பேசுறாங்க.

இதையும் படிக்க |  நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை டிஸ்டர்ப் பண்ணுவோம் - கியூட்டாக பேசிய திரிஷா

திரிஷா 20 வருஷம்னு சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கு. நீ ரொம்ப அழகாக இருக்க. ரவி எனக்கு ரொம்ப நாளா தெரியும். அவரை ஒரு பிரதரா பார்க்குறேன். நான் சினிமால யாரையும் பிரதர்னு சொல்ல மாட்டேன். பொதுவா ஒரு படத்துல 3 ஹீரோஸ் இருக்கும்போது போட்டி பொறாமை இருக்கும். ஆனா எங்களுக்குள்ள அப்படியில்லை என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Actor Vikram