முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வர்ரோங்கண்ணா... - கோயம்புத்தூரில் பொன்னியின் செல்வன் 2 படக்குழு - விக்ரம் பகிர்ந்த போட்டோ வைரல்

வர்ரோங்கண்ணா... - கோயம்புத்தூரில் பொன்னியின் செல்வன் 2 படக்குழு - விக்ரம் பகிர்ந்த போட்டோ வைரல்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கோயம்புத்தூரிலிருந்து கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோருடன் இருக்கும் படத்தை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரபலப்படுத்தும் பணியில் படக் குழுவினர் இறங்கியுள்ளனர். சென்னையில் இன்று தொடங்கும் விளம்பர நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி வரை பல்வேறு ஊர்களில் நடைபெறும் என கூறியுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் சுமார் 500 கோடி வசூலை எட்டியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை வரும் 28 ஆம் தேதி வெளியிடுகின்றனர்.




 




View this post on Instagram





 

A post shared by Vikram (@the_real_chiyaan)



இந்த திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருந்தாலும் படத்தை பிரபலப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதை ரசிகர்களே பல இடங்களில் கூறி வந்தனர்.

இதையும் படிக்க | என்னது! சூர்யாவின் கங்குவா படத்தின் பெயரில் ஏற்கனவே ரஜினி படமிருக்கிறதா? ஆச்சரியத் தகவல்

இதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆந்தம் பாடலை பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெளியிட்டனர். இந்தப் பாடல் இதைத்தொடர்ந்து இன்று கோயம்புத்தூர் செல்லும் படக் குழுவினர் அங்கு ரசிகர்களை சந்தித்து உரையாடுகின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் தனது விமானத்தில் நடிர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் இருக்கும் படத்தை பகிர்ந்து, கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    கோயம்புத்தூரில் ரசிகர்களுடன் உரையாடிய பிறகு 17-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அதை முடித்துகொண்டு கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.

    First published:

    Tags: Ponniyin selvan