முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமல் கொடுத்த பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்தேன் - விக்ரம் ஓபன் டாக்

கமல் கொடுத்த பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்தேன் - விக்ரம் ஓபன் டாக்

விக்ரம்

விக்ரம்

தான் விரும்பும் எந்த வேடத்திலும் நடிக்க, கமல்ஹாசன் அனுமதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார் விக்ரம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விக்ரம்.

வரலாற்று சிறப்பு மிக்க 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரம், 'பொன்னியின் செல்வனில்' நடிக்கும் வாய்ப்பை ஒருமுறை நிராகரித்ததாக ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரிடமிருந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் உரிமையைப் பெற்ற நடிகர் கமல்ஹாசன், அதனை டிவி தொடராக தயாரிக்கவிருப்பதாகவும், அதில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளுங்கள் என விக்ரமிடம் தெரிவித்ததாகக் கூறினார். ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு, சின்னத்திரையில் நடிக்க விருப்பமில்லை என்றும், வெள்ளித்திரையில் பொன்னியின் செல்வனில் நடிக்க விரும்புவதாகவும் கூறி வாய்ப்பை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டார் விக்ரம். தான் விரும்பும் எந்த வேடத்திலும் நடிக்க, கமல்ஹாசன் அனுமதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க வேண்டும் என்பது எப்போதுமே தனது விருப்பமாக இருந்த ஒன்று எனவும் தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actor Vikram, Kamal Haasan, Ponniyin selvan