முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்? 'தலைவர் 170' படம் குறித்த மாஸ் தகவல்

ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்? 'தலைவர் 170' படம் குறித்த மாஸ் தகவல்

விக்ரம் - ரஜினிகாந்த்

விக்ரம் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதேபோல் நடிகர்கள் தேர்வும் நடைபெறுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் - ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க | ரசிகரை இழுத்து வீசிய பாதுகாவலர்.. பதறிப்போன ராஷ்மிகா.. செல்ஃபிக்காக நடந்த பரபர சம்பவம்!

top videos

    அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் நேரடியாக விக்ரமிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.  மேலும் அந்த திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Actor Vikram, Rajinikanth