முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வனில் நடிக்க அழைத்த கமல்... நிராகரித்த விக்ரம்.. காரணம் என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வனில் நடிக்க அழைத்த கமல்... நிராகரித்த விக்ரம்.. காரணம் என்ன தெரியுமா?

கமல்ஹாசன் - விக்ரம்

கமல்ஹாசன் - விக்ரம்

பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கமல் வழங்கிய வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணம் குறித்து விக்ரம் பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், குந்தவையாக திரிஷா, வானதியாக ஷோபிதா, பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க | பொன்னியின் செல்வனில் நடிக்க அழைத்த கமல் - நிராகரித்த விக்ரம் - காரணம் என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக விக்ரம் அளித்த பேட்டி ஒன்றில், ''நீண்ட நாட்களுக்கு முன் கமல் சார் என்னை அழைத்து பொன்னியின் செல்வனில் நீங்கள் நடிக்கணும், எந்த கேரக்டர் வேணும்னு நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றார். அப்போது அவர் அதனை தொலைக்காட்சி தொடராக எடுக்க விரும்பினார்.

முதலில் நான் பொன்னியின் செல்வனை படித்துவிடுகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அடுத்த நாள் திரும்பி சென்று அவரிடம், திரைப்படமாகும் உருவாகும் வரை காத்திருக்கிறேன் என்று சொன்னேன். பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஒருவர் மனதில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது'' என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Actor Vikram, Ponniyin selvan