முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தங்கலான் படப்பிடிப்பில் விபத்து - விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு

தங்கலான் படப்பிடிப்பில் விபத்து - விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு

விக்ரம்

விக்ரம்

தங்கலான் படத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது நடிகர் விக்ரம் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சீயான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் முதன்முறையாக பா.ரஞ்சித் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. குறிப்பாக நடிகர் விக்ரம் உடல் எடை குறைந்து தன்னை வறுத்திக்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களை மிரள வைத்தார். கேஜிஎஃப் பின்னணியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க |  மாரி சீரியலில் இருந்து விலகிய சோனா - முகேஷ் கண்ணா!

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். கிஷோர் குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பயிற்சியின்போது நடிகர் விக்ரமிற்கு விலா எலும்பு முறிந்துவிட்டதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் வெளியிட்டுள்ள தகவலில், ''பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி.

top videos

    நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது விலா எலும்பு முறிந்தது. அதனால் அவரால் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது. உங்கள் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். மீண்டும் குணமாகி வந்து பழையபடி அசத்துவார்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

    First published:

    Tags: Actor Vikram