முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவருக்காக எழுதிய கதை - நடிக்க மறுத்த விக்ரம்? - பிரபல இயக்குநருடைய குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

அவருக்காக எழுதிய கதை - நடிக்க மறுத்த விக்ரம்? - பிரபல இயக்குநருடைய குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

சீயான் விக்ரம்

சீயான் விக்ரம்

தனக்காக எழுதியுள்ள கதையில் விக்ரம் நடிக்க மறுத்தாக சர்ச்சை எழுந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி. இந்தப் படம் தொடர்பாக பேட்டியளித்த அனுராக், ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்து இந்தப் படம் எழுதியிருந்தேன். இதனால் தான் படத்திற்கும் கென்னடி என்று பெயர் வைத்திருக்கிறேன்.

கென்னடி என்பது விக்ரமின் மற்றொரு பெயர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக விக்ரமை தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகே நடிகர் ராகுலை தொடர்பு கொண்டபோது அவர் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். அவரது பதிவில், கடந்த வருடம் நமக்குள் நடந்த உரையாடல்களை நினைத்து பார்க்கிறேன். நீங்கள் இந்தப் படத்துக்காக என்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அதற்கு நான் சரியாக பதலளிக்கவில்லை என்பதையும் வேறு நடிகர் மூலம் அறிந்தேன். உடனடியாக உங்களுக்கு போன் செய்து, எனக்கு இது தொடர்பாக உங்களிடமிருந்து மெயில் மற்றும் மெசேஜ் எதுவும் வரவில்லை என்பதையும், நீங்கள் தொடர்புகொள்ள முயற்சித்த எண் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்பதையும் நான் வேறு எண்ணை மாற்றிவிட்டேன் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

இதையும் படிக்க | நடிகர் வீட்டில் மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள்?! - வெளியான போட்டோவால் சர்ச்சை

மேலும் உங்களுக்கு போன் செய்தபோது, என் பெயரில் இருப்பதால் உங்கள் கென்னடி படத்தை நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்பதை தெரிவித்திருந்தேன். அன்புடன் சீயான் விக்ரம் என்கிற கென்னடி என்று குறிப்பிட்டுள்ளார்

. இதனையடுத்து அவருக்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், நிச்சயம் அது சரி பாஸ், இது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக சொல்கிறேன். அவர் வேறு நடிகர் மூலம் தெரிந்துகொண்ட பிறகு உடனடியாக அவர் போன் செய்தார். அதன் பிறகே அவர் வேறு வாட்ஸ் அப் நம்பர் வைத்திருக்கிறார் என்பதை அறிந்தோம்.

மேலும் அவர் எனக்கு சரியான தகவலை அளித்தார். மேலும் படத்தின் ஸ்கிரிப்டை படித்த பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் நாங்கள் அதற்குள் ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடித்திருந்தோம்.

top videos

    மேலும் அவர் கென்னடி என்ற பெயரை பயன்படுத்திய வகையில் அவர் எங்களை ஆசிர்வதித்தார். அதற்கு முன் நடந்தது என்பதையும் இந்தப் படத்துக்கு எப்படி கென்னடி என பெயர் வந்தது என்பதையும் தான் அந்த பேட்டியில் தெரிவித்தேன். நானும் சீயான் சாரும் இணைந்து வேலை செய்யாமல் ஓய்வு பெறமாட்டோம். நாங்கள் சேதுவுக்கு முந்தைய நாட்களுக்கு செல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor Vikram