முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இப்படி ஒரு கதையா? எம்ஜிஆர் பட ரீமேக்கில் நடித்த சிரஞ்சீவி - என்ன படம் தெரியுமா ?

இப்படி ஒரு கதையா? எம்ஜிஆர் பட ரீமேக்கில் நடித்த சிரஞ்சீவி - என்ன படம் தெரியுமா ?

எம்ஜிஆர் - சிரஞ்சீவி

எம்ஜிஆர் - சிரஞ்சீவி

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

எம்ஜி ராமச்சந்திரன் நடித்த பெரும்பாலான படங்கள் பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை. ஆங்கில, பிரெஞ்ச் படங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேற்குலகின் நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களும் இதில் அடங்கும். அவர் நடித்த நேரடி தமிழ்ப் படங்களில் ஒன்று பணக்கார குடும்பம்.

1964 திரைக்கு வந்த பணக்கார குடும்பம் படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். இதன் கதை, வசனத்தை எழுதியவர் சக்தி டி.கே.கிருஷ்ணசாமி. இவர் அடிப்படையில் ஒரு நாடக ஆசிரியர். சக்தி நாடக சபாவைத் தொடங்கி நாற்பதுகளில் முக்கியமான பல நாடகங்களை அரங்கேற்றினார். ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான துப்பறியும் கதையைக் கொண்ட பயங்கரி நாடகம், நட்பை அடிப்படையாகக் கொண்ட தோழன், காதலை மையப்படுத்திய விதி ஆகியவை இவர் எழுதியவற்றில் முக்கியமானவை.

ஒரு மேடையில் நாடகங்கள் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று மேடைகளை பயன்படுத்தி நாடகம் போட்ட முன்னோடிகளில் இவரும் ஒருவர். ஒரு மேடையில் நாடகம் நடந்து கொண்டிருக்கும். அதன் அடுத்தக் காட்சி அதன் அருகில் போடப்பட்ட இன்னொரு மேடையில் நடக்கும். இப்படி மூன்று மேடைகளைப் பயன்படுத்தி நாடகம் போடுவது மிகவும் கடினமானது, அதேநேரம் ரசிகர்களுக்கு மேலான ரசிக அனுபவத்தைக் கொடுக்கும். இதுபோன்ற பரிசோதனை முயற்சிகளை டி.கே.கிருஷ்ணசாமி மேற்கொண்டார்.

சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த பலரும் சினிமாவுக்கு சென்றனர். அப்படி இவரது நாடக சபாவிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் சிவாஜி, நம்பியார், விகே.ராமசாமி, எ.வி.சுப்பையா, ஏ.பி.நாகராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஐம்பதுகளிலிருந்து, எழுபதுகள்வரை டி.கே.கிருஷ்ணசாமி திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதினார்.

இதையும் படிக்க | ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்ட லிங்குசாமி- சிறை தண்டனையை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்

எம்ஜி ராமச்சந்திரன் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்திற்குப் பிறகு பணக்கார குடும்பம் படத்தின் கதை, வசனத்தை எழுதினார். இவை தவிர படகோட்டி, பணம் படைத்தவன் உள்பட வேறு சில படங்களிலும் பணியாற்றியுள்ளார். சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் இவர் எழுதிய நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதே.

'பணக்கார குடும்பம்' படம் காதல், குடும்பம், சென்டிமெண்ட், பழிவாங்குதல் என அனைத்தையும் கொண்டிருந்தது. பணத்துக்காக காதலியை கைவிட்டு, பணக்காரர் ஒருவரின் மகளை அசோகன் திருமணம் செய்வார். அவர்களுக்கு ஒரு மகள் பிறப்பாள். அந்த நேரத்தில் பழைய காதலியின் துணையுடன் மனைவியைக் கொலை செய்ய துணிவார் அசோகன். அவர்களின் குழந்தை வேறொரு இடத்தில் வளரும். தனது முன்னாள் காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார். அவளது சகோதரன் ஆர்.எஸ்.மனோகர்தான் வில்லன்.

அசோகனின் மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். அவரை எம்ஜி ராமச்சந்திரன் காதலிப்பார்.  இருவரும் அசோகனின் நிறுவனத்தில் வேலை செய்வார்கள். சரோஜாதேவி அசோகனின் மகள் என்பதை மனோகர் கண்டுப்பிடிப்பார். அவரது சகோதரி அசோகனின் இரண்டாவது மனைவி சரோஜா தேவியை மனோகருக்கு திருமணம் செய்து வைக்க வற்புறுத்துவார். மனோகரின் சதியை முறியடித்து சரோஜாதேவியும், எம்ஜி ராமச்சந்திரனும் எப்படி ஒன்றிணைந்தார்கள் என்பது கதை.

பணக்கார குடும்பம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. படம் 150 நாள்களை கடந்து ஓடியது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். 1970 இல் பணக்கார குடும்பம் இந்தியில் ஹம்ஜோய் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. டி.ஆர்.ராமண்ணாவே இந்தப் படத்தையும் இயக்கினார். 1978 இல் பலே ஹுடுகா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. டி.ஆர்.ராமண்ணா இதனை இயக்க விஷ்ணுவர்தன், மஞ்சுளா நடித்தனர். 1984 இல் தெலுங்கில் சிரஞ்சீவி, நளினி நடிப்பில் இது ரீமேக் செய்யப்பட்டது. கே.பாப்பையா இந்த ரீமேக்கை இயக்கினார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

top videos

    1964 ஏப்ரல் 24 இதே நாளில் வெளியான பணக்கார குடும்பம் இன்று 59 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

    First published:

    Tags: Classic Tamil Cinema, MGR