முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாளத்தில் வசூல் சாதனை படைத்துவரும் டோவினோ தாமஸின் '2018'

மலையாளத்தில் வசூல் சாதனை படைத்துவரும் டோவினோ தாமஸின் '2018'

டோவினோ தாமஸ்

டோவினோ தாமஸ்

மலையாளத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான டோவினோ தாமஸின் 2018 படம் வசூல் சாதனை படைத்துவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான மலையாள திரையுலகின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக அறியப்படும் படம்  2018 Everyone Is A Hero. இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஜூட் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்த படத்துக்காக தத்ரூபமாக மீள் உருவாக்கம் செய்து பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.

இதையும் படிக்க |  25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா...!

'2018 Everyone Is A Hero' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அனைத்து இடங்களில் இருந்தும் இந்த படத்திற்கு வரும் அபரிவிதமான பாராட்டுக்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 9வது நாளில் சுமார் 5.18 கோடி வசூல் செய்து மாலிவுட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் முதல் 9 நாட்களில் 80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மலையாளத் திரையுலகிற்கு ஒரு புதிய முகத்தை அளித்து வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

First published:

Tags: Malayalam actor, Movie