முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாட்டு நாட்டு பாடலை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர்... நெகிழ்ச்சியில் பாடலாசிரியர்!

நாட்டு நாட்டு பாடலை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர்... நெகிழ்ச்சியில் பாடலாசிரியர்!

பாடலாசிரியர் சந்திரபோஸ்

பாடலாசிரியர் சந்திரபோஸ்

நாட்டு நாட்டு பாடலை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் புகழ்ந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் சந்திரபோஸ்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

95-வது ஆஸ்கார் விருது விழா கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் நேரடி ஒளிப்பரப்பானது இந்த நிகழ்ச்சி. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது நேரடி ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சிறந்த பிறமொழி திரைப்படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளை சேர்ந்த படங்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், கீரவாணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் போட்டியில் இறுதிச்சுற்று நாமினேஷனில் இடம்பிடித்து விருதையும் வென்றது. ஏற்கனவே ஆஸ்கர் விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் ஒட்டுமொத்தமாக 100 கோடி முறைக்கு மேல் யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளதாக, அந்த பாடலின் டிஜிட்டல் உரிமை பெற்றுள்ள லகரி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், தெலுங்குப் பதிப்பு அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பிறகு 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. யூடியூப் மட்டுமின்றி, ஆடியோ ஸ்ட்ரீமீங் தளங்களிலும் நாட்டு நாட்டு பாடல் குறிப்பிடத்தகுந்த அளவு ரசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரிங்டோனாக 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் லகரி மியூசிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலின் ஆசிரியர் சந்திரபோஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் கவனத்தை இந்தப் பாடல் ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சந்திரபோஸ் கூறியதாவது, ஆஸ்கர் விழாவில் மதிய உணவு வேலையில் டாமைச் சந்தித்ததாக கூறியுள்ளார். அப்போது டாம் குரூஸிடம் தன்னை அறிமுகப்படித்திக்கொண்டதாகவும் அதற்கு அவர் தான் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்ததாகவும் அது மிகவும் பிடித்திருந்தது என்றும் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு நாட்டு பாடல் மிகவும் பிடித்ததாக டாம் குரூஸ் கூறியதாகவும் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment