போஜ்புரி படங்களில் நடித்தன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆகான்க்ஷா துபே. இவருக்கு வயது 25. தொடர்ச்சியாக மியூசிக் வீடியோவிலும் நடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார் அகான்க்ஷா. இதனை பார்த்த ஹோட்டல் பணியாளர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது மரணம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருப்பதாகவும், உடற்கூராய்வு முடிவுகளுக்கு பிறகே இதுகுறித்து முடிவுக்கு வரமுடியும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor, Commit suicide