முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ”என்னால தாங்க முடியல.... அவன் படத்துல வன்முறைகள் இருக்காது....” - மனோபாலா குறித்து இயக்குநர் பாரதிராஜா உருக்கம்

”என்னால தாங்க முடியல.... அவன் படத்துல வன்முறைகள் இருக்காது....” - மனோபாலா குறித்து இயக்குநர் பாரதிராஜா உருக்கம்

மனோபாலா - பாரதிராஜா

மனோபாலா - பாரதிராஜா

இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் கலக்கினார்.

பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். சமீபத்தில்  லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க |  இயக்குநரும் நடிகருமான மனோபாலா மறைவு - அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது,  “பாசத்திற்கும் நேசத்திற்கும் உரித்தான மிகப்பெரிய உதவியாளன் என்பதிலிருந்து இயக்குநரான மனோபாலாவின் மரணம் என்னால் தாங்க முடியவில்லை. என்னிடம் எத்தனையோ உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். மனோபாலா சிறந்த ஓவியன்.

top videos

    அவனது சிந்தனைகள் அற்புதமாக இருக்கும். அவன் இயக்கிய படங்கள் மென்மையாக இருக்கும். வன்முறைகள் இருக்காது. பெரும்பாலும் குடும்ப கதைகள், காதல் கதைகளை அற்புதமாக பண்ணுவான். இவ்வளவு குறுகிய காலத்துக்குள் விடைபெறுவான் என நினைத்துப் பார்க்கவில்லை” என்று பேசியுள்ளார்.

    First published:

    Tags: Actor, Death