முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தியேட்டருக்கு முன்னாடியே கலர்ஸ் தமிழில் வருது ஆரியின் 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' - எப்போ தெரியுமா?

தியேட்டருக்கு முன்னாடியே கலர்ஸ் தமிழில் வருது ஆரியின் 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' - எப்போ தெரியுமா?

ஆரியின் எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்

ஆரியின் எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படமான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ஒளிபரப்பாகவிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வயகாம் 18இன் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படமான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ஒளிபரப்பாகவிருக்கிறது.

அண்டவெளியில் இருந்து கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க மனித குலத்தின் விதியை மாற்றக்கூடிய கியூப்பிற்காக வேற்றுகிரகவாசியும் மனிதனும் சண்டையிடும் அறிவியல் கதைகளத்தை தத்ரூபமாக தன் முதல் படத்திலேயே இயக்குநர் யு.கவிராஜ் பதிவு செய்திருக்கிறார்.

ரௌதர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஆரி, நடிகை சுபஸ்ரீ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மொட்ட ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் இதுவரை கண்டிராத காட்சிகள் இந்தப் படத்தை சுவாரசியப்படுத்துகின்றன. மனிதர்களும் வேற்றுகிரக வாசிகளும் மோதுவது தான் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் திரைப்படத்தின் மையக்கரு.

மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மண் வளத்தை காப்பாற்ற துடிக்கிறார் ஹீரோ ஆரி. மற்றொரு பக்கம் க்யூப்யை (Cube)அழிக்கும் நோக்குடன் வேற்றுகிரகவாசிகள் களமிறங்குகிறார்கள். ஹீரோ ஆரி க்யூப்பின் உதவியுடன் மனித குலத்தைக் காப்பாற்றுவாரா? அல்லது வில்லன்களும் வேற்றுகிரகவாசிகளும் அவரை கொன்று விடுவார்களா? என்பதை அறிய, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

நேரடி தொலைக்காட்சி பிரீமியர் குறித்து இயக்குனர் யு.கவிராஜ் கூறுகையில், “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துபான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மக்கள் அனைவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு காணவிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது. வார இறுதியை பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை உண்டாக்கும் என நம்புகிறேன் என்று பேசினார்.

இத்திரைப்படம் குறித்து முன்னணி நடிகர் ஆரி கூறுகையில், முதலில் இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்திற்கு நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் யு.கவிராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் இதுவரை நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வேற்றுகிரகவாசிகள் மற்றும் பிற அற்புதமான புதுமைகளைக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த சுவாரஸ்யமான அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

First published:

Tags: Aari Arjunan, Colors Tamil | கலர்ஸ் தமிழ்