முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு ஷாக் ஆனேன் - விஜய்யின் கேரக்டர் குறித்து பகிர்ந்த லியோ நடிகர்

விஜய் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு ஷாக் ஆனேன் - விஜய்யின் கேரக்டர் குறித்து பகிர்ந்த லியோ நடிகர்

விஜய்

விஜய்

பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு குறைவான காலமே இருப்பதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. விஜய்யின் முந்தைய படங்களைப்போல் அல்லாமல் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் உடனுக்குடன் படக்குழுவினர் வெளியிட்டுவருகின்றனர்.

சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் படம் தொடர்பாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. சிறிது இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கப்படவிருக்கிறது. பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழில் பூவிழி வாசலிலே, விண்ணைத்தாண்டி வருவாயா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் பாபு ஆண்டனி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து விஜய் குறித்து பாபு ஆண்டனி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இளைய தளபதி விஜய் சார் என்னிடம் தன்னடக்கத்துடனும், அன்பாகவும் நடந்துகொண்டார்.

என்னுடைய பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை அவர் ரசித்து பார்த்ததாகவும் அவர் எனது ரசிகன் என்றும் தெரிவித்தார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரிடமிருந்து தன்னடக்கத்துடன் வெளிப்பட்ட வார்த்தைகளை கேட்டு ஆச்சரியமடைந்தேன்.

top videos

    மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவுடன் பணியாற்றியதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். விஜய் சார் உள்ளிட்டோரை இப்பொழுதுதான் முதன்முதலில் பார்த்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj