முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'எஜமான்' வானவராயன் மாதிரி மாப்ள வேணும்... - ஏவிஎமிற்கு வந்த பெண்ணின் கடிதம் - என்ன ஆச்சு தெரியுமா?

'எஜமான்' வானவராயன் மாதிரி மாப்ள வேணும்... - ஏவிஎமிற்கு வந்த பெண்ணின் கடிதம் - என்ன ஆச்சு தெரியுமா?

ரஜினிகாந்த் - மீனா

ரஜினிகாந்த் - மீனா

இந்தப் படம் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்த ஏவிஎம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான படம் எஜமான். இந்தப் படத்தில் ரேக்ளா பந்தயத்தில் நெப்போலியனுடன் போட்டிபோட்டு வென்று மீனாவை ரஜினிகாந்த் திருமணம் செய்துகொள்வார். மேலும், கவுண்டமணி, செந்தில் காமெடி, இளையராஜா இசை என ரசிகர்களால் இன்றளவும் நினைவு கூறப்படும் படமாக இருந்துவருகிறது. ஏவிஎம் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 30 வருடங்களாகிறது. இப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் வெளியான முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்களின் கருத்துக்களை பெற்று உடனுடுக்குடன் யூடியூப் பக்கங்கள் பதிவிட்டுவருகின்றன. கடந்த 30 வருடங்களுக்கு முன்னெல்லாம் மக்கள் கருத்துக்கள் வெளியாகும் வாய்ப்புகள் மிக குறைவு.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து  ஏவிஎம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு வந்த பெண் ரசிகையின் கடிதத்தை பகிர்ந்துள்ளது. அந்த கடிதத்தில், வணக்கம்! நான் செல்வி திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன். சார் சீங்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்து கொண்டு திரும்பவும் என் கணவனோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்கவேண்டும்.

வெள்ளித்திரையில் அழியா கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட உதயகுமாருக்கு வைர கிரீடம்தான் சூட்ட வேண்டும். இந்தக் கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் வாழ்வது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் குறித்து ஏவிஎம் எழுதியுள்ள பதிவில், இந்தக் கடிதத்தை படத்துக்கு விளம்பரமாக பயன்படுத்த நினைத்தோம். அதற்காக அந்தப் பெண்ணின் சம்மதத்தைப் பெற அவரது ஊருக்கு சென்றோம். ஆனால் அவர் தனது தந்தைக்கு பயந்துகொண்டு சம்மதிக்க மறுத்தார்.

ஆனால் ஆச்சரியமாக அவரது தந்தையிடம் பேசியபோது, தனது மகளின் கடிதத்தை பயன்படுத்த சம்மதித்தோடு அல்லாமல் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கொடுத்தார். மேலும் சில ஆண்களும் தங்களுக்கு வைத்தீஸ்வரி போல் பெண் வேண்டும் என கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதங்கள் படத்தின் வசூல் அதிகரிக்க பெரிதும் உதவியது. உண்மையான ரசிகர்களின் கருத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Actress meena, Rajinikanth