முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷாருக்கான் - அட்லியின் 'ஜவான்' பட ரிலீஸ் தேதி மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷாருக்கான் - அட்லியின் 'ஜவான்' பட ரிலீஸ் தேதி மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷாருக்கான்

ஷாருக்கான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படம் முதலில் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் என எதுவும் வெளியாகாததால் ஜவான் சொன்ன தேதியில் வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது. இந்தப் படத்துக்காக அட்லி முதன்முறையாக அனிருத்துடன இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இருந்தால் இயக்குநர் பக்கம் நிற்பேன் - மோகன் ஜி உறுதி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த ஒரு கைதியின் டைரி பட இன்ஸ்பிரேஷனில் உருவாகியுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Atlee, Shah rukh khan