முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 60 வயதில் 2வது திருமணம்... ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி மறைமுக ரியாக்‌ஷன்!

60 வயதில் 2வது திருமணம்... ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி மறைமுக ரியாக்‌ஷன்!

ஆஷிஷ் வித்யார்த்தி

ஆஷிஷ் வித்யார்த்தி

ஆஷிஷின் முதல் மனைவி ரஜோஷி வித்யார்த்தி, அவரது திருமணச் செய்திகளுக்கு சமூக ஊடகங்களில் மறைமுகமான பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர், அதில் அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இப்போது, ஆஷிஷின் முதல் மனைவி ரஜோஷி வித்யார்த்தி, அவரது திருமணச் செய்திகளுக்கு சமூக ஊடகங்களில் மறைமுகமான பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார்.

ராஜோஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ’சரியான நபர் உங்களை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார் என்ற அர்த்தத்தை அந்த போஸ்ட் தெரிவித்தது. "சரியானவர் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று கேள்வி கேட்க மாட்டார். அவர்கள் உங்களை புண்படுத்தும்படி எதையும் செய்ய மாட்டார்கள். அதை நினைவில் கொள்" என முதல் போஸ்ட் இருந்தது.

இரண்டாவது பதிவு மிகைப்படுத்தல் மற்றும் தெளிவுபடுத்துதல் பற்றி பேசப்பட்டது. “அதிக சிந்தனையும் சந்தேகமும் இப்போதே உங்கள் மனதை விட்டு நீங்கட்டும். தெளிவு குழப்பத்தை மாற்றலாம். அமைதி உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும். நீங்கள் நீண்ட காலமாக வலுவாக உள்ளீர்கள், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நேரம் இது. நீங்கள் இதற்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராஜோஷி பெங்காலி நடிகை சகுந்தலா பருவாவின் மகள். இது தவிர, ரஜோஷி ஆஷிஷ் வித்யார்த்தி & அசோசியேட்ஸ் என்ற அமைப்பின் இணை நிறுவனராகவும் உள்ளார். இது நாடகம், இசை மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையை மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ராஜோஷிக்கும் ஆஷிஷுக்கும் 23 வயதில் ஆர்த் வித்யார்த்தி என்ற மகன் இருக்கிறார்.

தற்போது ஆஷிஷ் திருமணம் செய்துள்ள ரூபாலி அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிலதிபர். “என் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்வது ஒரு சிறப்பான உணர்வு. காலையில் கோர்ட்டில் திருமணம், அதைத்தொடர்ந்து மாலையில் கெட் டுகெதர் நடத்தினோம்” என ஆஷிஷ் தனது இரண்டாவது திருமணம் குறித்து முன்னணி ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, மராத்தி மற்றும் பெங்காலி சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 1986-ல் நடிக்கத் தொடங்கிய ஆஷிஷ், பின்னர் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: