முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: அப்பாவுக்கு தலை சீவிவிடும் மகள் - கியூட்டான வீடியோவைப் பகிர்ந்த ஆர்யா

Video: அப்பாவுக்கு தலை சீவிவிடும் மகள் - கியூட்டான வீடியோவைப் பகிர்ந்த ஆர்யா

மகளுடன் ஆர்யா

மகளுடன் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது மகள் தனக்கு தலை சீவிவிடும் வீடியோவைப் பகிர அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். இந்தப் படம் ராமநாதபுரத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில் அறிமுகமான சித்தி இத்னானி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் ஜுன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
 
View this post on Instagram

 

A post shared by Arya (@aryaoffl)top videos

    இந்த நிலையில் நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் தனக்கு தலை சீவிவிடும் கியூட்டான வீடியோவைப் பகிர்ந்து, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு என்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் என் மகள் ஆரியானா என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Actor Arya