முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / VIDEO: ''ஃபிட்டா இருக்க இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க '' - ஆர்யா சொன்ன அட்வைஸ்

VIDEO: ''ஃபிட்டா இருக்க இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க '' - ஆர்யா சொன்ன அட்வைஸ்

ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா ஃபிட்டாக இருப்பது குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன் என கிராம பின்புறத்தில் கமர்ஷியல் படங்களை இயக்கிவருபவர் முத்தையா. தற்போது ஆர்யா நடிப்பில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை முத்தையா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வருகிற ஜுன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, பிரபு, பாக்யராஜ், நரேன், சிங்கம்புலி, தமிழ் மதுசூதன ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் டிரெய்லர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிக்க | மக்களை பிளவுபடுத்தும் படத்தை உருவாக்கக்கூடாது - 'தி கேரளா ஸ்டோரி' குறித்து பேட்ட வில்லன் கருத்து!
 
View this post on Instagram

 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நடிகர் ஆர்யா பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஆர்யா, ஃபிட்னஸ் என்பது அது ஒழுக்கம், பழக்க வழக்கம் சார்ந்தது. எல்லோரும் 2 மாதம் ஜிம்முக்கு போறோம், ஃபிட்டாகுறோம், ஜாலியா இருக்கோம் என நினைக்கின்றனர். ஆனா அப்படியில்ல.

top videos

    கரெக்டா ஜனவரி 1 ஆம் தேதி இந்த வருஷம் ஃபிட்டாக இருக்கணும்னு ஜிம் போய் சேருவாங்க. ஆனா தொடர்ந்து பண்ண மாட்டாங்க. அத ஒரு பழக்கமா வச்சிருந்தா தான் வாழ்க்கை முழுவதும் ஃபிட்டாக இருக்க முடியும் என்றார்.

    First published:

    Tags: Actor Arya