விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் எஃப்.ஐ.ஆர். அந்த திரைப்படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார். அவர் தற்போது பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு கையெழுத்தானது. அதன்பின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட வேலைகளும் மும்முரமாக நடைபெற்றுவந்தன. இந்தப் படத்தில் தற்போது நாயகர்களாக ஆர்யா மற்றும் கௌதம் கார்த்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மனு ஆனந்த் இயக்கிய எஃப்.ஐ.ஆர் திரைப்படம் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதையுடன் உருவாகவுள்ளது.
#MrX #Arya35
Can't wait to start rolling for this one 🔥🔥🔥
Let's rock brothers @itsmanuanand @Gautham_Karthik 🤗🤗💪@Prince_Pictures @dhibuofficial @tanvirmir @rajeevan69 @editor_prasanna @silvastunt @KkIndulal @utharamenon5 @lakku76 @venkatavmedia pic.twitter.com/dS24MWBx22
— Arya (@arya_offl) May 1, 2023
மிஸ்டர்.எக்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு மரகத நாணயம், கனா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த சிபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arya, Gautham Karthik