முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு லெஜண்ட் குடும்பத்திலிருந்து வந்து.... - யுவனை பாராட்டித் தள்ளிய ரஹ்மான் - வைரலாகும் பழைய வீடியோ

ஒரு லெஜண்ட் குடும்பத்திலிருந்து வந்து.... - யுவனை பாராட்டித் தள்ளிய ரஹ்மான் - வைரலாகும் பழைய வீடியோ

ரஹ்மான் - யுவன் ஷங்கர் ராஜா

ரஹ்மான் - யுவன் ஷங்கர் ராஜா

சரோஜா பட இசை வெளியீட்டு விழாவில் யுவன் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1997 ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா கடைசியாக வெளியான லத்தி வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். காதல், நட்பு, அம்மா, சோகம், பிரிவு என அனைத்து உணர்வுகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் யுவன்.

இளையராஜாவின் மகனாக அறிமுகமானாலும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார். பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமல்லாமல் முற்றிலும் புதிய குழுவின் படங்களுக்கும் இசையமைத்து அந்தப் படங்களுக்கு தனி அடையாளத்தை பெற்று தந்திருக்கிறார். அந்த வகையில் நிறைய படங்களில் ஹீரோ யுவன்.

இதையும் படிக்க |  இயக்குநர் அட்லியோட மகனின் பெயர் என்ன தெரியுமா ? வைரலாகும் போட்டோ




 




View this post on Instagram





 

A post shared by YsR Ajith (@yuvan_additz)



இந்த நிலையில் சரோஜா பட நிகழ்வில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் குறித்து பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகிவருகிறது. அவர் பேசியதாவது, யுவன் என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு ஸ்மைல் வரும். 23 வருஷத்துக்கு முன்னாடி இளையராஜா சார் கிட்ட நான் கீபோர்டு வாசிச்சிட்டு இருந்தேன். அப்போ அங்கிள்னு ஒரு குரல் கேட்டது. பார்த்தா யுவன் என்ன கூப்பிடுறாரு.

top videos

    இப்போது சிறப்பான இசையமைப்பாளராக வளர்ந்திருக்காரு. அதுவும் ஒரு லெஜண்ட் குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கியிருக்கார் என்று பாராட்டி பேசியிருந்தார். இந்த வீடியோவை யுவன் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

    First published:

    Tags: AR Rahman, Ilaiyaraja