இந்தியா மட்டுமல்ல உலக அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் நாயகன் எனக் கொண்டாடப்படும் இவர் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்.
கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் 😁 pic.twitter.com/Mji93XjjID
— black cat (@Cat__offi) April 25, 2023
பின்னர், சாய்ரா பானு கூட்டத்தை வாழ்த்தி, "மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், ஏனென்றால் அவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரது குரலால் அவரை நேசித்தேன். அவ்வளவுதான். என்னால் சொல்ல முடியும்." என சுருக்கமாக பேசினார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman