முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தர்பார் தோல்விக்கு காரணம் ரஜினியின் முடிவா? - ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த தகவல்

தர்பார் தோல்விக்கு காரணம் ரஜினியின் முடிவா? - ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

தர்பார் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த படத்துக்கும் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் இருவரும் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை பாதுகாப்பு அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும் சிறையிலிருந்து தப்பிக்கும் கைதியை மீட்பது தான் இந்தப் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பேட்ட, தர்பார் படங்களுக்கு பிறகு 3வது முறையாக ரஜினிகாந்த் - அனிருத் இணைந்துள்ளதால் ஜெயிலர் பட பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிவருகிறது. நடிகர் ரஜினிகாந்த்தின் பகுதிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.

இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தர்பார் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி சார் என்னிடம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று சொன்னார். காரணம் அந்த நேரத்தில் ஆகஸ்ட் அவர் கட்சி தொடங்குவதாக இருந்தார். நான் மிகப்பெரிய ரஜனி ரசிகன். அதனால் இந்தப் பட வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வரவிருந்த காரணத்தால் அந்த நேரத்தில் அதுதான் ரஜினிகாந்த்தின் கடைசி படம் என்று பேசப்பட்டது.

top videos

    என்னிடம் படம் பண்ணலாம் என்று சொன்னது பிப்ரவரியில். நான் மார்ச்சில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். ஜுன் மாதத்திற்கு படப்பிடிப்பு முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு . அதனால் இந்தப் படத்தை மிஸ் பண்ணக்கூடாது. அதே நேரத்தில் இந்தப் படத்தை ஹிட்டாக்கவும் விரும்பினேன். அதுதான் என்னுடைய தவறான முடிவு. சரியான திட்டமிடல் இல்லையென்றால் தவறாக முடியும் என புரிந்தது என்று பேசினார்.

    First published:

    Tags: AR Murugadoss, Rajinikanth