முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கவின் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?

கவின் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?

கவின் - அனிருத்

கவின் - அனிருத்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பது தான் தற்போதைய ஹாட் நியூஸ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கவினின் அடுத்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது. 

சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான தாதா விமர்சனம் மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தனது அடுத்தப் படத்தை இறுதி செய்துள்ளார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனராக மாறும் நடன இயக்குனர் சதீஷுடன் அவர் கைகோர்க்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.

“படம் சமகால, நகர்ப்புற காதலை மையப்படுத்தி, பியார் பிரேமா காதல் மாதிரி இருக்கும். சதீஷின் சிறந்த நண்பரான அனிருத், இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். வீட்ல விசேஷம் படத்தை தயாரித்த ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார்” என கவினின் அடுத்தப் படத்திற்கு நெருக்கமான ஒருவர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

படம் ஏப்ரல் மாதம் துவங்கும் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். “கவினின் இந்த காதல் படத்தில் நடிக்க ஒரு கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணியில் குழு தற்போது உள்ளது. அது முடிவானதும், படம் அடுத்த மாதம் துவங்கும்” என்று அந்த ஆதாரம் மேலும் கூறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anirudh