முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / VIDEO: 'இந்தியன் 2' படத்தில் சம்பவம் செய்யும் அனிருத் - பாடலை ரசித்து கேட்கும் ஷங்கர் - வைரலாகும் வீடியோ

VIDEO: 'இந்தியன் 2' படத்தில் சம்பவம் செய்யும் அனிருத் - பாடலை ரசித்து கேட்கும் ஷங்கர் - வைரலாகும் வீடியோ

அனிருத் - ஷங்கர்

அனிருத் - ஷங்கர்

Indian 2: இந்தியன் 2 படத்துக்காக அனிருத் இசையமைக்க, அதனை இயக்குநர் ஷங்கர் ரசித்து கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை ஷங்கர் இயக்கி வருகிறார். இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடன் மட்டுமே பணியாற்றிய ஷங்கர் முதன்முறையாக கேம் சேஞ்சர் படத்துக்காக இசையமைப்பாளர் தமனுடனும், இந்தியன் 2 படத்துக்காக அனிருத்துடனும் இணைந்துள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸை படமாக்கிய ஷங்கர், அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். விக்ரம் படத்துக்கு பிறகு அனிருத்தும் கமல்ஹாசனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிக்க |  சரத்பாபு உடல் தகனம்... ரஜினி முதல் சூர்யா வரை நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு அனிருத் வந்திருக்கிறார். அப்போது கேரவனில் அனிருத் பாடலை இசைக்க, அதனை ஷங்கர் ரசித்து கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்குவரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

First published:

Tags: Anirudh, Director Shankar, Kamal Haasan