முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் - அமீர் கொடுத்த அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் - அமீர் கொடுத்த அப்டேட்!

வெற்றிமாறன் - அமீர்

வெற்றிமாறன் - அமீர்

அரசியலுக்கு வந்தால் தான் என்ன?  என்று தோன்றும் அளவிற்கு ஈடுபாடோடு இதில் பணியாற்றினோம்!

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் எஸ்.ஆர் பிராபகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள 'செங்களம்' இணைய தொடரின்  செய்தியாளர்  சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். அதோடு  நாயகி வாணி போஜன், விஜி ராஜேந்திரன், இசையமைப்பாளர் தருண், இயக்குனர் ஏஸ்.ஆர் பிரபாகரன் உடப்பட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் பேசிய இயக்குநர் அமீர்,  நான் ரசித்தவர்களாகவும், என்னை ரசிப்பவர்களாகவும் மேடையில் உள்ளது சந்தோசம். நடிகர் சிவாஜியுடன் நேருக்கு நேர் பயப்படாமல் நடித்த ஒரு ஆள் என்றால்  விஜி சந்திரசேகராக தான் இருக்க முடியும். அழுத்தமான கதாபத்திரத்தில் நடித்தவர்.

குடிமகன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டபோது வாணிபோஜனை தான் நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் அது நடக்காமல் போனது. மீண்டும் நடந்தால் உங்களை சந்திக்கிறேன்.

ஜீ-5 ஓடிடி  தளத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில்  'நிலமெல்லாம் ரத்தம்' என்ற படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன். சில ஆண்டுக்கு முன்பு ஒப்பந்தமானது வெற்றிமாறன் அவர் வேறு பணிகளில் பிஸி ஆகிவிட்டார். அதனால் அப்படியே உள்ளது.

இந்த படத்தின் முன்னோட்டம் பார்க்கையில் நாம் இந்த படைப்பை விட்டுவிட்டோம் என தோன்றியது , ஒரு இயக்குநர் சக இயக்குநரை இப்படி தோன்ற வைத்தாலே வெற்றிதான். அந்த வகையில் இப்போதே இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். என்று கூறினார்.

நடிகை வாணி போஜன் பேசியதாவது, படத்தின் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இந்த படத்தில் இருந்து விலக நினைத்தேன். ஆனால் படக்குழு கொடுத்த நம்பிக்கையால் நான் இதில் நடித்தேன்.

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் உட்பட படக்குழுவினருக்கு அதிக தொந்தரவு கொடுத்துள்ளேன் அதற்கு இந்த மேடையில் மன்னிப்பு  கேட்கிறேன். படம் அருமையாக வந்துள்ளது "அரசியலுக்கு வந்தால்தான் என்ன?" என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு இந்த கதையில் ஈடுபாடோடு பணியாற்றினோம் என்றார். இதை படப்பிடிப்பு தளத்தில் கூட அடிக்கடி கேட்பேன் என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசியதாவது, படத்தின் முக்கிய திருமண  காட்சி ஒன்றை 400 பேர் வைத்து எடுக்க திட்டமிட்டோம், அங்கு வந்தவர்கள் கதைக்கு ஏற்ப இல்லை என்பதால் அதை மூன்று முறை எடுத்தோம் , முதல் நாளில் 5 லட்சமும், இரண்டாவது நாளில் 2 லட்சமும் செலவானது இருப்பினும் தயாரிப்பாளர் அதை புரிந்துகொண்டு மீண்டும் அந்த காட்சிக்கு செலவு செய்து படமாக்க உதவினார் என்றார்.

First published:

Tags: Ameer, Director vetrimaran