தமிழ், தெலுங்கில் உருவான நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய கோல்டு திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழிலில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் இந்தப் படம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
கோல்டு படத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்த நிலையில், இந்தியாவில் கமல்ஹாசன் சார் மட்டுமே என் படம் மோசமானது கமெண்ட் செய்ய தகுதியானவர் என்றும் அவர் மட்டுமே சினிமா பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர் என்றும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் மற்றுமொரு அதிரடி கருத்தை அல்போன்ஸ் புத்ரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கி சினிமாவுக்கு கடன் தராததால், ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள், பணியாளர்கள் சினிமா பார்ப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவை எடுத்த நபர்கள் அல்லது அமைச்சருக்கு சினிமா பார்க்க உரிமையில்லை. பசுவின் வாயை மூடிவிட்டு பாலை எதிர்பார்க்காதீர்கள். சினிமாவைக் கொல்லும் இந்த பிரச்னையை கவனிக்குமாறு அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Loan, Cinema, Reserve Bank of India