முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: 4வது தலைமுறை... கியூட் வீடியோக்களால் வியூஸ் அள்ளும் அல்லு அர்ஜுனின் மகள்..!

Video: 4வது தலைமுறை... கியூட் வீடியோக்களால் வியூஸ் அள்ளும் அல்லு அர்ஜுனின் மகள்..!

மகளுடன் அல்லு அர்ஜுன்

மகளுடன் அல்லு அர்ஜுன்

சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள அல்லு அர்ஹாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது கியூட் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திரையுலகினருக்கான ரசிகர்கள் பட்டாளங்களில் ஒரு பகுதி கட்டாயம் அவர்களின் வாரிசுகளுக்கும் இருக்கும். பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் தங்கள் குழந்தைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.

இதற்கு அஜித், சூர்யா போன்றோர் எடுத்துக்காட்டு என்றால், விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு உள்ளிட்டோர் விதிவிலக்குகள். அந்த வரிசையில் தான் அல்லு அர்ஜூன் தனது மகளை சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)தனது மகளாகவும் குட்டி இளவரசியாகவும் நடித்துள்ள 6 வயது அர்ஹா, சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர் என்றும் அவருக்கு அவரது தந்தையுடைய வெளிச்சம் தேவையில்லை என்றும் அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தாவும் உச்சிமுகர்ந்திருந்தார்.

சாகுந்தலம் படத்தால் மட்டுமின்றி அவ்வப்போது தனது கியூட் செய்கைகளால் மொழிகளை கடந்து தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார் அல்லு அர்ஹா. #AlluArha என்ற ஹாஷ்டேக்குடன் அல்லு அர்ஜூனின் ரசிகர்களும் அல்லு அர்ஹாவின் ரசிகர்களும் இந்த வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)அந்த வகையில், தனது மகள் அல்லு அர்ஹாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை அல்லு அர்ஜுன் அண்மையில் பதிவிட்டுள்ளார். இளையராஜா இசையமைத்த தும்பி வா என்ற மலையாளப் பாடலின் பின்னணியில் இந்த மனதை கவரும் வீடியோவை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)top videos

    பத்மஸ்ரீ அல்லு ராமலிங்கய்யா, அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுனை தொடர்ந்து திரையுலகில் அடி வைத்துள்ள 4வது தலைமுறையான அல்லு அர்ஹா, திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவார் என்பதில் சந்தேகமில்லை.

    First published:

    Tags: Allu arjun