முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாட்டு நாட்டு பாடலுக்கு இணைந்து டான்ஸ் ஆடிய ஆலியா பட் - ராஷ்மிகா : வைரலாகும் வீடியோ!

நாட்டு நாட்டு பாடலுக்கு இணைந்து டான்ஸ் ஆடிய ஆலியா பட் - ராஷ்மிகா : வைரலாகும் வீடியோ!

ஆலியா பட் - ராஷ்மிகா மந்தனா

ஆலியா பட் - ராஷ்மிகா மந்தனா

இந்த விழாவில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து ஆர்ஆர்ஆர் பட நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதன் தொடக்க விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷோகலா மேதா, ரிலையன்ஸ் ரீட்டைல் தலைவர் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரிலையன்ஸ் எனர்ஜி தலைவர் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் பிரியங்கா சோப்ரா, ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதே போன்று ஈஷா யோகா மையத்தின் சத்குரு, ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து 3வது நாளான இன்று இந்தியா இன் ஃபேஷன் என்ற பெயருடைய நூலை நீடா அம்பானி மற்றும் இஷா அம்பானி இணைந்து வெளியிட்டனர். மேலும் இந்திய இன் ஃபேஷன் என்ற கண்காட்சியையும் இருவரும் துவக்கி வைத்தனர். இந்த கலாச்சார மையம் நாளை முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

top videos

    இந்த நிலையில் இந்த விழாவில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து ஆர்ஆர்ஆர் பட நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Actress Rashmika Mandanna, Alia Bhatt, Mukesh ambani, Nita Ambani