முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியானது AK62 டைட்டில்...

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்... வெளியானது AK62 டைட்டில்...

அஜித்குமார்

அஜித்குமார்

அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதனையடுத்து, அவரது படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்துவந்தது. அஜித் ரசிகர்கள் பட அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.

அஜித் தற்போது தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ளார். ஆனால் அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62-வது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார். இதனால் அஜித் 62 படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரது பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.

அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடிவந்தனர். லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டது. படத்தின் இயக்குநரையும் உறுதிசெய்துள்ளது.

top videos

    அதன்படி, லைகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் விடா முயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Ajith