தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார். இவர் பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் அஜித்குமாரின் தம்பி அனில் குமார் இறுதிச் சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.
அந்த வகையில் நடிகர் விஜய் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்று நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அதற்குள் இறுதி சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டன. இதனையடுத்து ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
#AjithKumar Hug His Mom And Shares The Feelings...🥺💔 pic.twitter.com/IDuK144ho7
— Rxᴅ_Uᴅʜᴀʏᴀɴツ🖤™ (@Itz_Rxd1) March 24, 2023
இந்த நிலையில் மின்மயானத்தில் நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டபோது அவரது அம்மா துக்கத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல் அழுகிறார். இதனையடுத்து அவரது அம்மாவை கட்டியணைத்து அஜித் ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தந்தையை இழந்து வாடும் அஜித் குடும்பத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith