முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரமுடன் பிரச்னை.. கிஸ் சீனில் வாந்தி தான் வந்தது... பிரபல நடிகை ஓபன் டாக்!

விக்ரமுடன் பிரச்னை.. கிஸ் சீனில் வாந்தி தான் வந்தது... பிரபல நடிகை ஓபன் டாக்!

சீயான் விக்ரம்

சீயான் விக்ரம்

மீரா படத்தில் லிப்லாக் காட்சியில் விக்ரமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா பகிர்ந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தமிழில் நாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பார்த்திபனுடன் தையல்காரன், பாக்யராஜுடன் ராசுகுட்டி , ரஜினிகாந்த்துடன் எஜமான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு ஐஸ்வர்யா பேட்டியளித்தார். அதில் மீரா படத்தில் லிப்லாக் காட்சியில் விக்ரமுடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, ''மீரா படத்தில் வரும் அந்த லிப்லாக் காட்சி வீனஸ் ஸ்டுடியோவில் எடுத்தாங்க. அந்த அழுக்கான தண்ணி, எங்கள் வாய்க்குள் போய் ரொமான்ஸ்லா வரல வாந்தி தான் வந்தது. அந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்தே எனக்கும் விக்ரமுக்கும் பிரச்னை.

இதையும் படிக்க |  கார்த்தியின் ’ஜப்பான்’ இவரைப் பற்றிய கதையா? 4 மாநில போலீஸாருக்கு சவாலாக விளங்கிய திருவாரூர் முருகன் - யார் இவர்?

விக்ரமிற்கு அது 2வது படம். எனக்கு 7வது படம். விக்ரம் மிகவும் கடின உழைப்பாளி. ஆனா நான் படு சோம்பேறி. ஜாலியா எல்லோருடம் அரட்டை அடிச்சிட்டு இருப்பேன். என்னுடைய பெயர் சாந்தமீனா. பி.சி.ஸ்ரீராம் என்னை சாந்தினு கூப்பிடுவார். விக்ரம் மெத்தட் ஆக்டர். அவருக்கு ரிகர்சல் பண்ணி தான் நடிப்பாரு.

ஷுட்டிங் ஸ்பாட்ல நாங்க ரெண்டு பேரும் கீறியும் பாம்புமா இருந்தோம். பி.சி.ஸ்ரீராம் எங்களைப் பார்த்து நான் இங்க லவ் ஸ்டோரி எடுக்கிறேன். இங்க கெமிஸ்ட்ரி எங்க இருக்குனு திட்டுவாரு என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Actor Vikram