முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘கற்பனை கூட செய்தது இல்லை’ - தந்தை ரஜினிகாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்ட ஐஸ்வர்யா!

‘கற்பனை கூட செய்தது இல்லை’ - தந்தை ரஜினிகாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்ட ஐஸ்வர்யா!

ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

’லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறித்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கினர்.

Also read... அதிதி உடன் காதலா? ரசிகையின் கேள்விக்கு ‘டக்கர்’ பதிலளித்த நடிகர் சித்தார்த்!

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில், ரஜினி மொய்தீன் பாய் என்ற பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். சமீபத்தில் அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.


இதனிடையே லால் சலாம் படப்பிடிப்பில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்” என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth