முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராஷ்மிகா மந்தனாவை குறை சொன்னேனா? - பரபர விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ராஷ்மிகா மந்தனாவை குறை சொன்னேனா? - பரபர விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ராஷ்மிகா மந்தனா - ஐஸ்வர்யா ராஜேஷ்

ராஷ்மிகா மந்தனா - ஐஸ்வர்யா ராஜேஷ்

ராஷ்மிகா குறித்து நான் பேசியதை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்திருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபர்ஹானா படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இஸ்லாமிய பெண்ணான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக மத நம்பிக்கைகளைக் கடந்து வேலைக்கு செல்லும் விதமாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இஸ்லாமிய இயக்கத்தினர் பலர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை சிவ சைலம் தெருவில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்? 'தலைவர் 170' படம் குறித்த மாஸ் தகவல்

இந்தப் படம் தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியளித்தபோது புஷ்பா படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரீவள்ளி கேரக்டரை ராஷ்மிகாவை விட சிறப்பாக செய்திருப்பேன் என்று கூறியதாக தகவல் பரவியது. ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்து  சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு விளக்கமளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

top videos

    அதில், துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்று விளக்கமளித்துள்ளார்.

    First published:

    Tags: Actress Aishwarya Rajesh, Actress Rashmika Mandanna