முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டீசரை வைத்து எப்படி சொல்ல முடியும் ? ஃபர்ஹானா பட சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

டீசரை வைத்து எப்படி சொல்ல முடியும் ? ஃபர்ஹானா பட சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஃபர்ஹானா படத்தின் டீசருக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 12-ம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ''பர்ஹானா படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் பண்ணும் வகையிலோ எடுத்த படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே ஃபர்கானாவை எடுத்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க | சாந்தாவால் வெற்றி கல்யாணத்துக்கு வந்த சிக்கல் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!




 




View this post on Instagram





 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)



இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'இந்தப் படத்தில் ஃபர்ஹானாவுக்கு 3 குழந்தைகள். கணவராக ஜித்தன் ரமேஷ் பண்ணிருக்காரு. அவங்களோட கூட வொர்க் பண்ற கேரக்டர்ல ஐஸ்வர்யா தத்தா, அனு மோல் நடித்திருக்கிறார். இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் கதை. சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் திரில்லராக இந்தப் படம் இருக்கும்.

top videos

    இந்தப் படத்தில் சர்ச்சைக்குரியவகையில் எதுவும் இல்லை. படம் பார்க்காம இப்படி பேசுறாங்க. படம் பார்த்தால் தான் புரியும். டீசரை வைத்து மட்டும் முடிவு பண்ணக்கூடாது'' என்று பேசினார்.

    First published:

    Tags: Actress Aishwarya Rajesh