முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு வருஷமாச்சா? மிஸ்ஸான ஏகே 62 பட வாய்ப்பு - பாடல் வரிகளை பகிர்ந்து வருத்தப்பட்ட விக்னேஷ் சிவன்

ஒரு வருஷமாச்சா? மிஸ்ஸான ஏகே 62 பட வாய்ப்பு - பாடல் வரிகளை பகிர்ந்து வருத்தப்பட்ட விக்னேஷ் சிவன்

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

கடந்த வருடம் இன்று தான் அஜித் குமார் - விக்னேஷ் சிவனின் ஏகே 62 படம் அறிவிக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருந்த ஏகே 62 படம் டிராப் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதை தொடர்பாக தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்தப் படம் கைவிடப்பட்டடதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது அஜித் குமார் குடும்பத்துடன் துபைக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. துணிவு படத்தில் நீண்ட தாடியுடன் காட்சியளித்த அஜித் தற்போது வெளியான புகைப்படங்களில் டிரிம் செய்யப்பட்ட தாடியுடன் தோற்றமளிப்பதால் ஏகே 62 படத்துக்காக இந்த லுக்குக்கு மாறியிருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் யூகங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

மற்றொரு பக்கம் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் இந்தப் படத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

இந்த நிலையில் கடந்த வருடம் இன்று தான் அஜித் குமார் - விக்னேஷ் சிவனின் ஏகே 62 படம் அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பு வெளியான ஒரு வருடத்தில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில் இதனைப் பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துவருகின்றனர். விக்னேஷ் சிவனும் தனது நானும் ரௌடி தான் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் கிடச்சது இழக்கிறதும், இழந்தது கிடைக்கிறதும் வழக்கம்தானடி என்ற வரிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு இழந்தது குறித்து அவர் இவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Director vignesh shivan