நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கார்த்திக் தங்கவேல், ஹரி, பாண்டியராஜ் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியிருந்தார்.
இதில் கார்த்தி தங்கவேல் திரைப்படம் முதலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்க உள்ளது.
அந்த திரைப்படத்தை ஜீ நிறுவனத்துடன் இணைந்து பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ளார்.
A positive and vibrant start for #Vishal34 - here are the pictures from the pooja this morning!#ProductionNo14 @VishalKOfficial #Hari @ZeeStudiosSouth @kaarthekeyens @karthiksubbaraj @Kirubakaran_AKR @TheVinothCj @kalyanshankar @pavsone @onlynikil pic.twitter.com/9MRxzKf2Kw
— Stone Bench (@stonebenchers) April 23, 2023
விஷால் - ஹரி கூட்டணியில் ஏற்கனவே வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தன. இதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் ஹரியுடன் விஷால் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vishal