விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது
இதன் ஒரு பகுதியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்குவங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிக்க | பிச்சைக்காரன் 2 பட பாதிப்பா? - பிச்சைக்காரர்களுக்கு போர்வை, விசிறி வழங்கிய விஜய் ஆண்டனி
The best things in life are Unexpected - because there were no expectations ❤️
Thank you audience for making this happen❤️❤️❤️❤️ #TheKeralaStory pic.twitter.com/NGzUKmNZfb
— Adah Sharma (@adah_sharma) May 24, 2023
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும்போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.
இருப்பினும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பெண்களில் மையப்படுத்திய படங்களில் இதுவரை ரூ.200 கோடிக்கு மேலாக வசூலித்த முதல் படம் என்ற சாதனையை தி கேரளா ஸ்டோரி படம் பெற்றுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Collection, Movies