முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''தி கேரளா ஸ்டோரி' படம் போலினு சொல்றவங்க, இத கூகுளில் தேடிப் பாருங்க'' - பிரபல நடிகை அதிரடி

''தி கேரளா ஸ்டோரி' படம் போலினு சொல்றவங்க, இத கூகுளில் தேடிப் பாருங்க'' - பிரபல நடிகை அதிரடி

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி படத்தின் உண்மைத்தன்மை குறித்து அந்தப் படத்தில் நடித்துள்ள அடா சர்மா கமெண்ட் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க |  சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி' படம் - முக்கிய முடிவு எடுத்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்!

தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் படம் திரையிடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் இந்தப் படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால் பிரச்னை எழக்கூடும் என்பதால் இந்தப் படம் வெளியான திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

top videos

    இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள அடா சர்மா என்ற நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில், 'நிறைய இந்தியர்கள் பாதிக்கப்பட்டதை பார்த்தபிறகும் தி கேரளா ஸ்டோரி படம் போலியானது என சொல்கிறார்கள். ISIS மற்றும் Brides என்ற வார்த்தையை தயவுசெய்து கூகுள் செய்யுங்கள். சில ஆங்கில பெண்கள் சொல்வதை கேட்ட பிறகாவது உங்களுக்கு எங்கள் இந்திய படம் உண்மை என புரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Movie