முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆசைக்கு இணங்க மறுத்ததால் மார்பிங் படத்தை அனுப்பி மிரட்டினார் - தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்!

ஆசைக்கு இணங்க மறுத்ததால் மார்பிங் படத்தை அனுப்பி மிரட்டினார் - தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்!

ஸ்வதிஸ்தா முகர்ஜி

ஸ்வதிஸ்தா முகர்ஜி

தன் ஆசை இணங்க மறுத்த நடிகையின் மார்பிங் படத்தை தயாரிப்பாளர் இமெயில் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. ஹிந்தி மட்டுமல்லாமல் பெங்காலி, மராத்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். தற்போது ஷிபுர் என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ரவிஷ் சர்மா மற்றும் சந்தீப் சர்கார் மீது ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தா கோல்ஃப் கிரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரில், கடந்த சில மாதங்களாக தனக்கு ரவிஷ் சர்மா, சந்தீப் சர்கார் ஆகியோரிடம் இருந்து தங்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்யப்பட்ட தன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மிரட்டல் விடுத்து ஈமெயில் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

top videos

    மேலும் அவருடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் ரவிஷ் சர்மா இமெயில் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிஷ் சர்மாவின் வழக்கறிஞர் ஷிபுர் படத்தின் இயக்குநர் அரிந்திரம் பட்டச்சாரியாவின் தூண்டுதலின் பேரில் தான் ஸ்வஸ்டிகா முகர்ஜி இப்படி நடந்துகொள்வதாக விளக்கமளித்துள்ளார்.

    First published:

    Tags: Cyber crime