ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா, விக்ரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த பெருமையை பெற்றிருக்கிறார் சிம்ரன். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், வெறும் கிளாமர் வேடங்களை மட்டும் ஏற்காமல் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிம்ரன் திறமையான டான்சர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆள்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா போன்ற இவரது பல பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | Video: வைரலாகும் ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' டிரெய்லர்
Congratulations 🎉 🎉🎉🎉🎉Another win #CSK #IPL2023
You are the best 🥳🥳🥳🥳 pic.twitter.com/HMNSCqU5jR
— Simran (@SimranbaggaOffc) May 20, 2023
கல்யாணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து சிறிது இடைவேளை விட்ட அவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த வருடம் மட்டும் சிம்ரன் நடிப்பில் மகான், ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட், கேப்டன் என மூன்று படங்கள் வெளியாகியிருந்தன. சிம்ரன் நடிப்பில் இந்த வருடம் அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண்ஜெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை நடிகை சிம்ரன் தனது மகனுடன் கண்டு ரசித்துள்ளார். மைதானத்தில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் பகிர, சிம்ரன் மகன் அதற்குள் இவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டாரா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.