முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நள்ளிரவில் பொதுமக்களுடன் போராட்டத்தில் குதித்த ஷகீலா.. நடந்தது என்ன?

நள்ளிரவில் பொதுமக்களுடன் போராட்டத்தில் குதித்த ஷகீலா.. நடந்தது என்ன?

ஷகீலா

ஷகீலா

தனது குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பொதுமக்களுடன் நடிகை ஷகீலா போராட்டத்தில் குதித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலாவின் இமேஜை முற்றிலும் மாற்றியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஷகிலாவின் கனிவான நடவடிக்கைகளைப் பார்த்தவர்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் சமூக பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷகிலா தனது குடியிருப்பு பகுதியில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார். அவரது வசிக்கும் குடியிருப்பில் பராமரிப்பு செலவு செலுத்தப்படாத காரணத்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம்.
 
View this post on Instagram

 

A post shared by The Shakila (@imshakila_official)இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஷகிலாவும் போராட்டத்தில் கலந்துகொண்டார். தனக்கு சம்பந்தமில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போராடிய ஷகீலாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

First published:

Tags: Cooku with Comali, Shakeela