முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பத்து தல படத்தில் செம டான்ஸ்! குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரையில் சாயிஷா..!

பத்து தல படத்தில் செம டான்ஸ்! குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரையில் சாயிஷா..!

சாயிஷா

சாயிஷா

சிம்பு நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதால், 'பத்து தல' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்து தல படத்தில் நடிகை சாயிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒபேலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் சிம்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் சந்தோஷ் பிரதாப் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். முன்னதாக, நடிகர்கள் ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் பத்து தல படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக இயக்குனர் ஓபேலி கிருஷ்ணா கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே இப்படத்தில் நடிகை சயிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தெரிகிறது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாயிஷாவை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள், படத்தில் அவர் நடனமாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிம்பு நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதால், 'பத்து தல' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களைத் தொடர்ந்து இதுவும் வெற்றிப் பெற்றால், சிம்புவுக்கு ஹாட்ரிக் ஹிட்டாக இருக்கும். கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Simbu